திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே உள்ள செம்பட்டி ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில்  கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். காரை கேரள மாநிலம் கரமணையை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒட்டி வந்தார். காரில் அபிஜித் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

கார் T.பண்ணைப்பட்டி அருகே வரும் போதுபொழுது   காரின் டயர் வெடித்ததில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரை தாண்டி  சென்று எதிரே  பழனியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

மேலும் 7 பேர் பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உதவியுடன் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு  பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தது. விபத்து குறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்

மேலும் படிக்க  | சிவகங்கை அருகே தலைமை ஆசிரியை கொடூர கொலை – 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை !!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link