சேலம் கெங்கவல்லி அருகே தீபாவளி பண்டிகையை யொட்டி ஆட்டு சந்தையில் 5 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதில் 5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது, இந்த கால் கடை வாரச்சந்தையில் சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால் நடைகளை விற்று வர்த்தகம்  செய்து வருகிறார்கள்.  இதனையடுத்து நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று சனிக்கிழமை ஆட்டு சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் வந்துள்ளது. இருந்தாலும் பண்டிகை நாள் என்பதால்    வழக்கத் தைவிட ஆடுகள் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கூடுதல் விலைக்கு விற்கப்ட்டது. 

மேலும் படிக்க | கடும் இருமல்… பேச திணறல் – ஜெயலலிதாவின் உறையவைக்கும் இறுதி நிமிடங்கள்

மேலும் இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந் வியாரிகளும் வந்திருந்தனர்.  சந்தையில்  வழக்கத்தை விட நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் ஆடுகள் வரை விற்ப்பனை செய்யப்பட்டதில் சுமார் 5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது.  இதனால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் வழக்கத்தைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.  மேலும் நாமக்கல்லில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை, ஆடு ஒன்று 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விலை போனது.

goat

நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.  இச்சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், இராசிபுரம், எருமப்பட்டி, வலையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில் இன்று நாமக்கல்லில் ஆடுகள் சந்தை நடைப்பெற்றது. அதில் நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது.

goat

இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 45 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆட்டுக் குட்டியானது 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. இதனால் ஆடுகள் நல்ல விலை போனதால் ஆடுகளை விறபனைக்கு கொண்டு வந்தவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | இந்திய கடற்படை மீது கொலை முயற்சி வழக்கு பதியுங்கள் – சீமான் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link