தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் டாக்டர் விஜயபாஸ்கர் இடம் தொடர்பில் இருந்த மருத்துவர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி சேலத்தில் பல்வேறு மருத்துவர்கள் வீட்டிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்பான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஷூட்டிங்கே முடியல அதற்குள் கோடிகளை அள்ளிய வாரிசு?…

மேலும் சேலம் சூரமங்கலம் பாரதி தெரு பகுதியில் வசித்து வரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வசந்தகுமார் என்பவரது வீட்டில் சோதனையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் ஸ்ரீரங்க பாளையம் வித்யாளயா சாலையில் உள்ள மருத்துவர் மனோகர் என்பவரது வீட்டிலும், அஸ்தம்பட்டி பழனியப்பா நகர் பகுதியில் உள்ள மருத்துவர் சுஜாதா என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வேறு வழக்குகளில் சில முறை சோதனை நடந்துள்ல நிலையில் தற்போது மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்டது தெரிந்துதே. அதன்படி தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜெயிலர் படத்தில் நான் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் ஹீரோயினின் பளிச் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link