சென்னை டிஜிபி அலுவலகத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்க கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் அதிமுக தொண்டர்களின் திருக்கோயிலாக இருக்கக்கூடிய அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரவுடிகளுடன் வந்து சூறையாடியுள்ளனர். மேலும் ஓபிஎஸ் உடன் மனோஜ் பிரபாகரன் ஜே சி பி பிரபாகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வருவதற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர் என்றார்.

அதிமுக கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒ. பன்னீர்செல்வதை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுமதிக்கக் கூடாது என என்ன டிஜிபீடம் புகார் அளித்திருப்பதாகவும் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடி விட்டு IPC 145 படி வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவரை தலைமைக் கழகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தார்

முதலில் டிஜிபி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டு விட்டது பின்னர் காவல் துறை ஆணையரிடமும் மனு அளிக்கப்படும் என்று அவர் கூறினார். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்கிறதா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது ஒரு சிவில் சார்ந்த வழக்கு எனவும் மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும் மேலும் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் எனவும் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல் 

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இல்லாத ஓபிஎஸ் எப்படி கட்சியின் லெட்டர் பேட், அதிமுக கொடியோ பயன்படுத்த எப்படி முடியும் என கேள்வி எழுப்பினார். தன்னுடைய நண்பர் வைத்திலிங்கத்திற்கு அதிமுகவில் எந்த வேலையும் இல்லை எனவே அமமுக  வில் வாங்க என சசிகலா சாக்லேட் கொடுத்து கூப்பிடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார் 

யார் உண்மையான தொண்டனாக இருந்தாலும் அதிமுக கட்சியை தாண்டி எந்த ஒரு கட்சிக்கும் போக மாட்டார்கள் எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் திமுகவுடன் பேசவில்லை எனவும் அவர் கூறினார். திமுகவும் ஓபிஎஸ்-ம் கைகோர்த்து விட்டார்கள். என்றும் ஓபிஎஸ் திமுகவின் பி டீமாகவும் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரும் திமுகவின் பி டீமாகவும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆர் எஸ் பாரதி ரீல் சுற்றும் பாரதி என்று கூறிய அவர், அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை வெளியிடுவது குறித்த கேள்விக்கு ‘இன்டர்நெட்டில் இருந்து எடுத்து வெளியிடுவார்’ என குற்றம் சாட்டினார்

மேலும் படிக்க | நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வீட்டில் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன ? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Source link