உணவு இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை,  பணத் தட்டுப்பாடு, விவசாயம் பாதிப்பு என பல காரணிகளால் உணவுபொருட்கள் கிடைப்பது அரிதாகிவிடுமோ என்ற அச்சங்களுக்கு மத்தியில் பலர் உணவு இல்லாமல் இறப்பது கவலை தரும் விஷயம் என்று சொல்கிறோம். அதுமட்டுமல்ல, ஏழை நாடுகளில் பலர் இரு வேளை கூட திருப்தியாக உண்ண முடிவதில்லை என்ற நிலையும் உள்ளது. ஆனால், உணவை வீணடிப்பது என்ற விஷயத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உணவு வீணடிக்கும் போக்கு இருந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?  புள்ளிவிவரங்கள் ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது. 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நபருக்கு 50 கிலோ என்ற அளவில் உணவு வீணடிக்கப்படுகிறது. இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது என்பது மிகவும் எதிர்மறையான விஷயம். 

மேலும் படிக்க | பட்டினியால் வாடும் இந்தியா… 107ஆவது இடத்திற்கு வீழ்ச்சி – என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு?

அந்த வகையில், உலகம் முழுக்க வீணாகும் உணவுகளை தடுக்கவும், உணவை சரியாக வீணாக்காமல் பயன்படுத்தவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் (Foodathon) போட்டி, சென்னையில் நேற்று முன்தினம் (அக். 16) நடைபெற்றது. சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகரில் இருந்து தொடங்கியது.

2 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., என மூன்று பிரிவுகளாக இந்த மரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெவ்வேறு பிரிவுகளில், அனைத்து பாலினத்தவர்களும் பங்கேற்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

Foodathon

நாட்டின் 75ஆவது சுதந்திர தின நினைவு ஆண்டை முன்னிட்டு, 75 ஆதரவற்றோர்களுக்கு 7500 கிலோ உணவு தானியங்களை மாரத்தான் ஏற்பாட்டளார்கள் வழங்கியுள்ளனர். இது உலக சாதனைக்கான முயற்சியாகவும் பார்க்கப்பட்டது. குறிப்பாக, இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று, முழுவதுமாக ஓடி இலக்கை அடைந்த தனிஷ் என்ற 7 வயது சிறுவன் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். 

மேலும் படிக்க | ரிஷப் பந்த் டி20 உலக கோப்பையில் இருந்து விலகல்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link