தாம்பரம் அருகே உள்ள சோமங்களம் பகுதியில் துப்பாக்கி முனையில் சரித்திர பதிவேடு குற்றவாளி சச்சின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முழங்காலக்கு கீழே இரண்டு முறை போலீசார் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.  தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் இவர் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற பட்டாதாரி ஆவார்.

மேலும் படிக்க | Rajiv Gandhi assassination case : நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இவர் மீது சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள் இரண்டு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.  தாம்பரம் சாய்ராம் கல்லூரி அருகே உள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் காட்டுப் பகுதியில் சச்சினை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

tam

அந்த சமயத்தில் சச்சின் காவல்துறையினரை அரிவாளால் வெட்ட வந்துள்ளான், தற்காப்புக்காக காவல்துறையினர் அவனை முழங்காலுக்கு கீழே இரண்டு முறை சுட்டு பிடித்துள்ளனர். காலில் குண்டு பாய்ந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

tam

மேலும் படிக்க | தமிழகத்தை அமளிக் காடாக்கும் பாஜகவின் சதித்திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link