சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் முத்துகிருஷ்ணன்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் ரூபாய் என மொத்தம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்த 24 வயது இளைஞர் முத்துக்கிருஷ்ணன். இவர், தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர். நேற்று இரவு பணி முடிந்து தனது அறைக்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க | கனியாமூர் வழக்கில் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை

அப்போது சென்னை எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.இதில் பள்ளத்தில் உள்ள இரும்பு கம்பிகள் முத்துக்கிருஷ்ணனின் உடல் முழுவதும் குத்தி படுகாயம் அடைந்தார். 

படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனை சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடியாக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பல மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்காக பலரும் ரத்தம் கொடுக்கவும் முன்வந்தனர்.

ஆனால் முத்துக்கிருஷ்ணன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஊடக உலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், முத்துகிருஷ்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மொத்தம் 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | மாநில அரசு சேனலுக்கு தடை – எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்… மநீம கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link