சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய  தலைமை அலுவலகத்தில்  வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணி குறித்தும், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை குறித்தும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எந்தவித தடையும் இல்லாமல்  சீரான மின்சாரம் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை பழுதடைந்த  44,000 மின்கம்பங்கள்  புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

100 நாள்களில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் விநியோகம் வழங்குவதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு முதல்வர் வழங்கினார். மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் மின்னகத்தை தொடர்பு கொண்டு எந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க | அதிகாரத்தில் இருப்பதால் இவ்வளவு அலட்சியமா உதயநிதி?…

சீர்காழியைப் பொறுத்தவரை 46 மின் மாற்றிகள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  மழையினால் சென்னையில் எவ்வித பாதிப்பும் இல்லை. சீர்காழியில் மழையினால் பாதிக்கப்பட்டதை அடுத்து 36 மணி நேரத்தில் சீராக மின்விநியோகம் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டது. 

மழை பெய்தாலும் கூட தடையில்லாமல் மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பாராட்டுகின்றனர். வீடுகளில் மற்றும் பள்ளிகளில் உள்ள ஒயர்களை பொறுத்தவரை  நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து மின்சார வாரியம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது..

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால்கூட ஆதார் எண்ணை இணைக்கும்போது 100 யூனிட் மானியம் மின்சாரம் என்பது தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link