ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்று தரைப்பாளத்தில் தண்ணீர் செல்வது தெரியாமல் போதையில் கிடந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன் முழு கொள்ளளவு ஆன 71 அடியை எட்டியதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்பட்ட நீரானது கடைமடை பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வந்தடைந்தது சுமார் 7000 கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் இறங்கவோ ஆற்றைக் கடக்குவோ குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சேதம் அடைந்த தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வது கூட தெரியாமல் போதையில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ள நீரானது பாலத்தை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கும் நிலையில் பாலத்தின் மேல் போதையில் படுத்திருந்தவரை பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.

மேலும் படிக்க | விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; பயத்தில் அலறிய பயணிகள்!

விரைந்து வந்த காவல் துறையினர் போதை ஆசாமியை பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். சிறிது நேரம் தாமதித்திருந்தால் போதை ஆசாமி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இருப்பார் கடும் வெள்ளப்பெருக்கில் போதை ஆசாமி பாலத்தில் படுத்திருந்தது சிறிது நேரம் பரமக்குடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | கொடூர கொலையாளியை காதலித்த பெண் சிறை அதிகாரி! சிறையில் பூத்த காதல்!

மேலும் படிக்க | NRI டாக்டர் விவேக் மூர்த்திக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link