தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த  இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். 

திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கினர்.    

மேலும் படிக்க | ஜூன் 9 கல்யாணம்.. அக். 9 குழந்தைகள்..! நயன் – விக்கி திடீர் பெற்றோர் ஆனது எப்படி?

இதையடுத்து, இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாங்கள் பெற்றோர்களாகிவிட்டதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தது பலரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள நிலையில், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்தது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் வாடகை தாய் முறையில் கடும் கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது. திருமணமான தம்பதிகள் தங்களின் உடல்நிலை குறித்த அறிக்கைகளை சமர்பித்து அதன்பின்னர் தான் வாடகை தாய் முறைக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் தான் திருமணமானது.  

திருமணமாகி 4 மாதங்களில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதே தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து, பல்வேறு கேள்விகள் கிளம்பிய நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடமும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர்,”அவர்கள் வாடகை தாய் முறை மூலம்தான் குழந்தைகளை பெற்றார்களா என்பது குறித்து தெரியாது. அவர்கள் சட்டப்படிதான் இந்த இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்களா என்பது குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப்படும்” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் இரட்டை ஆண் குழந்தைகள் விவகாரம் குறித்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்று டிஎம்எஸ் (DMS – மருத்துவ சேவை இயக்குநரகம்) தலைமையிலான குழு விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் எப்படி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள், அவர்கள் இதற்கு முறையான அனுமதியை பெற்றிருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் இந்த அறிக்கையில் விவரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் விவகாரம் : அரசு எடுத்திருக்கும் முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link