தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த திமுக இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு  ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்ட நெரிசலில் விமான நிலையத்திலிருந்து சிலை மற்றும் மரங்கள் உடைந்து கீழே விழுந்தது திமுக தொண்டருக்கு காயமடைந்தனர். 

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தடைந்தார். இவரை வரவேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் திமுகவினர் கூடினர். அப்போது காவல்துறை குறைபாட்டால் இளைஞர்களிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

மேலும், விமான நிலையத்தில் அலங்காரதிற்கு வைக்கப்பட்ட கருங்கற்களிலான 4 அடி கல் சிலை, பூந்தொட்டிகள் உடைந்தது. மேலும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் கீழே கிடந்தது மக்கள் மிதித்து சென்றனர். இதனால் விமானத்தில் வந்த பயணிகள் இதனை பார்த்து முகம் சுளித்து கொண்டு கடந்து சென்றனர்.

மேலும் படிக்க | மோடிஜியை கண்டு வியந்து மகிழ்கிறேன் – காசியில் இளையராஜா பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link