சிவகங்கை அரண்மனை வாசலில் அதிமுகவின் 51 ஆம் தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்து, மோசடியில் ஈடுபட்டு தற்போது அதிமுகவினரையே வசைபாடுகிறார்‌ என கடுமையாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் கண்ணப்பன் திமுகவில் தொடர்ந்து நீடிக்க மாட்டார் எனவும் கூறினார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

“பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்து மோசடியில் ஈடுபட்டவர். தற்போது அதிமுகவினரையே வசைபாடுகிறார். அமைச்சர் கண்ணப்பன் திமுகவில் தொடர்ந்து நீடிக்க மாட்டார்” எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் இராஜகண்ணப்பனின் ஆதரவாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு தொலைபேசி வாயிலாக ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பேசுவது சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர் ஒருவர் அதிமுக முன்னாள் அமைச்சருக்கே கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் தமிழக அரசியல் களத்திலும் சர்ச்சையாக மாறியுள்ளது. 

மேலும் படிக்க | திராவிட மாடல் மட்டும் இல்லையென்றால்…. பொன்முடி பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link