சென்னை: பாசமலர்கள் என்றால் சிவாஜி கணேசன் சாவித்ரி நடித்த திரைப்படம் நினைவுக்கு வரும். அதேபோல மரணத்திலும் இணை பிரியாத சகோதரிகளின் பாசப் பிணைப்பு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ராதாம்மா மற்றும் கனக்கம்மா என்ற சகோதரிகள் ஒரே நாளில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்கு இன்னும் ஒரு சகோதரியும் இருக்கிறார். மூன்று அக்கா தங்கைகளும் ஒரே இடத்தில் வசித்து வந்தனர்.சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதாம்மா.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராதம்மா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். ராதாம்மாவின் மரணச் செய்தியை அனைவருக்கும் தெரிவித்தனர். ரதம்மா காலமான செய்தியை கேட்டு பலரும் அழுதனர்.

மேலும் படிக்க | படித்த முட்டாள் என்று பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆனால், அக்கா இறந்து போனதைக் கேட்ட தங்கை கணக்கம்மா, அதிர்ச்சியில் உறைந்துபோனார். சிறிது நேரத்தில் அப்படியே, இருந்த இடத்தில் சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள், கனக்கம்மா மயக்கம் அடைந்திருப்பார் என்று நினைத்து அனைவரும் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர்.

ஆனால், கனக்கம்மா அக்கா இழந்த செய்தியை கேட்டதும் உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்தது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

வாழ்ந்த போது மட்டுமல்லாமல் இறக்கும் போது சேர்ந்தே இறந்த சகோதரிகளின் பாசம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, சில நாட்களுக்கு முன்னதாக, கணவன் இறந்ததும், செய்தி அறிந்த மனைவி உயிரிழந்த செய்தியும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதேபோல, மனைவி உயிரிழந்தார் என்ற சேதியை கேட்ட கணவர் உயிரிழந்த செய்தியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சகோதரியின் மரணச் செய்தியைக் கேட்டு, தங்கை உயிரிழந்த சம்பவமும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்பப்டுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் – காருக்கு தீ வைத்த பயங்கரம்

மேலும் படிக்க | எதிர்கால மருத்துவர்களை அழிக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்: வைகோ கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link