சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் உள்ள லோன் செக்‌ஷனில் லாக்கரை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கபப்ட்டதாக கூறப்படுகிறது.  சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் இன்று பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப் போட்டு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | திராவிட மாடல் குறித்து கட்டுரைகள் வெளிவர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வங்கியில் உள்ள லோன் செக்‌ஷனில் லாக்கரை உடைத்து பணம், நகை கொள்ளை என தகவல் வெளியாகியுள்ளது. 3 பேர் வந்து கத்தியை காட்டி மிரட்டி பணம், நகையை கொள்ளையடித்துச் சென்றதாகவும், வந்தவர்களில் ஒருவர் வங்கி ஊழியராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் போலீசார் தகவல் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகையின் விவரங்கள் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் போலீசார் தகவல்.

இதனிடையே கொள்ளை சம்பவம் குறித்து மக்களிடையே தகவல் வெளியான நிலையில் அந்த வங்கியில் தங்கள் நகை பணத்தை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

மேலும் படிக்க | ஓர் ‘எதிர்க்கட்சியாக’ அதிமுகவிடம் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?!

மேலும் படிக்க | பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link