சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த ஜெயக்குமாரி மகள் காயத்ரி, பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு, கன்னிமாரா லைப்ரரியில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்மசிஸ்ட் படித்துள்ள விஸ்வநாதனுக்கும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தர்மபுரியில் திருமணம் நடைபெற உள்ளது.  மேலும் இவர்களது திருமண வரவேற்பு சென்னை வெப்பேரியில் உள்ள ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெறுகிறது.

invite

மேலும் படிக்க | மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

இந்நிலையில் மணப்பெண் காயத்ரி தனது திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும் அனைவராலும் கவரப்பட வேண்டும் என எண்ணி, தனது வரவேற்பு பத்திரிக்கையை மாத்திரைகள் உள்ள டப்பா வடிவில் அச்சிட்டு உள்ளார்.   அந்த டப்பாவில் அனைத்து பகுதிகளிலும் தங்களது திருமணம் மற்றும் வரவேற்பு தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

invitation

இந்த வரவேற்பு அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்தது மட்டுமின்றி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிறிது தினங்களுக்கு முன்னர் மாத்திரை வடிவில் திருமண அழைப்பிதழ் ஒன்று வைரல் ஆனா நிலையில் தற்போது மருந்து டப்பா வடிவிலான அழைப்பிதழ் வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link