இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்திற்க்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.  அனைவருக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர எல்லா ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என்று பேசுகிறார்.  இதை கண்டித்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இவர் பேசியது எங்களை மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இது திட்டமிட்ட சதி பேச்சு. தான் எடுத்த உறுதிமொழிக்கு எதிரான  போக்கை அவர் கடைபிடித்து வருகிறார். 

இது குறித்து மேலும் கரு.நாகராஜன் கூறியதாவது:

நீ இஸ்லாமியராக பிறந்தால், நல்ல தாய் பெற்ற மகன், கிறிஸ்துவாக பிறந்தால் நல்ல தாய் பெற்ற மகன், ஆனால் நீ இந்துவாக இருந்தால் விபச்சாரியின் மகன் என்று பொது மேடையில் பேசி உள்ளார். ஆன்மிகம் செழித்த இந்த பூமிக்கு, தமிழக மக்களுக்கு, கடவுளை வணங்குபவர்களுக்கு இதை விட அவமானம் எதும் இல்லை. வேதனையான ஒன்று. இது திமுகவின் சதியாக கூட இருக்கலாம். சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சதியாக கூட இருக்கலாம்.

மேலும் படிக்க | ‘பழிவாங்குவதில் கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்’ – ரெய்டு குறித்து சீறிய சி.வி. சண்முகம்  

முதலமைச்சர் இதன் மீது நடவடிக்க எடுத்தாக வேண்டும். ஆ.ராசா மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம். திமுக தலைவர் நடவடிக்கை எடுத்து அவரை திமுகவை விட்டு நீக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் தூண்டதலாலேயே பேசுகிறார் என எடுத்துக் கொள்ளப்படும். வட மாநிலங்களில் மத தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய பாஜகவினரை பாஜக மேலிடம் நீக்கியுள்ளது. அது போல் திமுகவும் ஆ.ராசாவையும் நீக்க வேண்டும். பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்து குடும்பங்களை அவமானபடுத்தும் செயலாகவே எடுத்துக்கொள்ளப்படும். உண்மையில் மாண்புள்ள முதலமைச்சர் என்றால் நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும்.. வீரமணி பேசுவதை எல்லாம்  நாங்கள் பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம்.. அவரின் பிழைப்பு அப்படி. ஆனால் பல லட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி அப்படி பேசலாம். இது திமுகவுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கோடிக்கணக்கன மக்களுக்கு எதிரான செயல் என்பதை விரைவில் புரிந்துகொள்வார்கள். 

இந்து என்றால் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி. என அனைவரும் வந்து விடுகிறார்கள். அனைவரையும் சேர்த்துதான் ஆ.ராசா சொல்கிறார். நம் அனைவரையும் விபச்சாரியின் மகன் என நம் தாயை இழிவாக பேசுகிறார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | அதிமுக போராட்டம் அறிவித்தால் ரெய்டு விடுவதா? திமுக மீது ஜெயக்குமார் சாடல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link