முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக முகாம் அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலை ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருர், சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார். 

இதனால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தனது கான்வாய் வாகனத்தை உடனடியாக நிறுத்தியுள்லார். வாகனத்தில் இருந்து இறங்கி, காயமடைந்தவரை உடனடியாக அங்கு நின்ற ஆட்டோவில் ஏற்றி, சிகிச்சை மேற்கொள்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் படிக்க | காவலர் தியாகிகள் தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது

தொடர்ந்து, காயமடைந்தவர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் ஏற்பட்டபோது, அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சம்பவ இடத்தில் இருந்தார். முதலமைச்சர் சாலையில் இறங்கியதை தொடர்ந்து, பலரும் அங்கு குவியத் தொடங்கினர். தொடர்ந்து அங்கிருந்த காவலர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  

மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் பதவியை தவிர்த்துவிட்டேன் – ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link