நேற்று முன் தினம் தலைமை செயலகத்தில்,சென்னை தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் நடந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித் அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் மேயரை பதில்  சொல்ல அறிவுறுத்தியுள்ளார்.

மேயர் தான் பேசலாமா? என்பதை மீண்டுமொருமுறை உறுதிபடுத்தி கொள்வதற்காக அமைச்சரை பார்க்கவே ” சொல்லுமா” என உச்ச ஸ்துதியில் மிரட்டுவது போல் தெரிவித்தார். இதை எதிர்பாராததால் ஒரு நிமிடம் திடுக்கிட்ட மேயர் ஒருவழியாக சூழலை சமாளித்தார். அதேபோல் நிகழ்ச்சி முடிந்ததும் மேயர் புறப்பட தயாரானா போது ,புகைப்படக்காரர்கள் சிலர்,  குழு புகைப்படம் எடுப்பதற்காக மேயரை நிற்குமாறு கோரிக்கை வைக்க முனையவே,அதை மேயர் கவனிக்காததால், அமைச்சர் நேரு குறுக்கிட்டு  “அம்மா நிப்பியாம் அப்டியே” என தெரிவித்தார்.

மேலும் படிக்க | சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் – உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

மேலும் படிக்க | ’அடக்குமுறையை மீறி வளர்ந்தவன்’ கோவை அரசு விழாவில் முதலமைச்சர் கர்ஜணை

அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒரு மேயருக்கு, ஒரு பெண்ணுக்கு திமுக மூத்த அமைச்சர் கொடுக்கும் மரியாதை இதுதானா? மேயரை ஒருமையில் பேசலாமா?. மேயர் பட்டியலின பெண் என்பதால் தான் அமைச்சர் இப்படி நடந்து கொண்டாரா? என்றெல்லாம் அமைச்சரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கினர். இந்நிலையில், அமைச்சர்  என்னை ஒருமையில் பேசவில்லை,உரிமையில் தான் பேசியுள்ளார், என்னை தன் மகள் போல் பார்த்து கொள்கிறார் என கூறி சென்னை மேயர் பிரியா ராஜன்பஞ்சாயத்தை முடித்து வைக்க முயற்சித்துள்ளார். மேயரின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, இந்த விவகாரத்தை நெட்டிசன்கள் இத்தோடு முடிப்பார்களா, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(செய்தியாளர்: ஜெகதீஷ்) 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link