கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 நாட்களுக்கு பின் சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து அக்டோபர் 10ம் தேதி இதுதொடர்பாக அந்த மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு சென்று அரசு காப்பகத்தில் சேர்த்தது.

மேலும் படிக்க | ஆளுநரை மாற்றுவதா?… நெவர்… எல். முருகன் உறுதி

தனது மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக அழைத்துச் சென்றனர் எனத் தெரியவில்லை எனக் கூறி, அவரை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, மாணவியை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக கூறி அவரை உடனடியாக விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, மாணவியை விடுவித்து தாயிடம் ஒப்படைத்து விட்டதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், முழுமையாக விசாரணை நடத்தாமல் அவசர கதியில் மாணவியை அரசு காப்பகத்தில் தங்க வைத்த குழந்தைகள் நலக்குழு மற்றும், மாணவன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செயல்  குறித்தும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு ‘நன்றி’ கூறிய குட்டி யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link