அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக அலுவலகம் சென்றது. அங்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இருந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின்படி அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சிவி சண்முகம் தரப்பில், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் திருடிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டதுடன், ஆவணங்களை ஒப்படைக்கக்கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் சிவி சண்முகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | ‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய்டவா’ – மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புலம்பல்

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது பதிலளித்த தமிழக காவல்துறை, அதிமுக அலுவலகம் முன்பு ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது கலவரம் ஏற்படுத்ததுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை: முதலமைச்சர் முக ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link