சென்னை: தமிழகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலைமையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாக வெளியான விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே வீடற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாக ஆங்கில செய்தித்தாளில் செய்தி வெளியானது. 

போதிய கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண் குழந்தைகள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆங்கிலச் செய்தித்தாள் வெளியிட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | 50 ஆண்டுக்கு முன் போட்ட விதை..! இந்தியாவின் “குட்டி ஜப்பானாக ஓசூர்” மாறிய வரலாறு

செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர், ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிட்டதா? எப்படி தெரிந்து கொள்வது? அறிகுறிகள்

மேலும் படிக்க | சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link