திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அரசு பேருந்து மீது மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து பேருந்தில் தீ பரவியது. இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்க ஜெயபால் என்பவருடைய மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரவீன் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறான். 

இன்று பிரவீன்க்கு பிறந்த நாள் என்பதால் நன்பர்களை ஒரே வாகனத்தில் மூன்று பேர் சென்று பிறந்த நாளை கொண்டாடி விட்டு பள்ளி அருகே உள்ள சக நண்பரை பார்க்க வந்த போது ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட நாகனம்பட்டியை சேர்ந்த ஆகாஷ், நரிப்பட்டியை சேர்ந்த நரசிம்மன் ஆகிய இரண்டு பேர் படுகாயத்துடன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க: 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை

Two-wheeler collided government bus

பேருந்து தீப்பிடித்த உடனே பேருந்தில் பயணம் செய்த அனைவரும் உடனே இறங்கியதால் எந்தவித காயம் ஏற்படவில்லை. பேருந்து மட்டும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்தில் தீயை அணைத்தனர். அவ்வழியாக வந்த உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கள் துறை அமைச்சர் சக்ரபாணி உடன் இருந்து விபத்து நடந்த அரசு பேருந்து பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்து வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க: 6ஆம் வகுப்பு பள்ளி மாணவன் இடி தாக்கி உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link