நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியில் முகாமிடுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள ஹோம்மேட் சாக்லேட் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி இரண்டு கிலோ சாக்லேட் உண்டு சென்றது. 

மேலும் படிக்க | திருமண பூரிப்பில் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண்

இன்று இரண்டாவது முறையாக மீண்டும் சாக்லேட் தொழிற்சாலையின் நுழைவு கதவை உடைத்து விட்டு மீண்டும் சாக்லேட் உண்டுவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் இப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிக்கு கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக கரடிகள் ஆபத்தான மிருகமாக பார்க்கப்படுகிறது.  மனிதர்களை ஒப்பிடும் போது உடல் அளவில் மிகப்பெரியதாக இருப்பதால் அதன் அருகில் செல்ல பலரும் அச்ச படுவர்.  மலை சார்த்த பகுதிகளில் வாழும் மக்களை கரடி அடித்து கொன்றது என்ற செய்திகளை பல முறை கேட்டு இருப்போம்.  இதனால் குன்னூர் பகுதியில் வாழும் மக்கள் தற்போது அச்சத்துடன் உள்ளனர்.

மேலும் படிக்க | நச்சுனு கிஸ் பண்ண மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகன், கடுப்பான மணமகள், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link