வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சீர்காழியில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. இதனால் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழியும் அதேநேரத்தில் சில இடங்களில் தற்காலிக கால்வாய்களும் உருவாகியுள்ளன. மேலும், ஏரி மற்றும் ஆற்றுக்கு செல்லும் நீர் வழிப் பாதைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வீட்டின் பூட்டை உடைத்து 615 கிலோ வெள்ளி, நகைகள் திருட்டு: உறவினர் மீது சந்தேகம் 

திருமுல்லைவாசல் இருந்து பழையாறு வரை செல்லும் சாலையின் குறுக்கே ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் அளவுக்கதிகமாக மழைநீர் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பாலம் சேதமடைந்துள்ளது. அப்போது, பால் வண்டி ஒன்று சென்றபோது, திடீரென பாலம் உள்வாங்கியிருக்கிறது. அதில் வாகனம் பாலத்திற்குள் சிக்கிக் கொண்டது. பதற்றமடைந்த வாகன ஓட்டுநருடன் இணைந்து அக்கம்பக்கத்தினர் அந்தரத்தில் நின்ற பால் வண்டியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

சிறிது நேர போராட்டத்துக்குப் பிறகு பாலத்திற்குள் சிக்கிய ஆட்டோ பத்திரமாக மீட்கப்பட்டது. பாலம் உள்வாங்கியதை தொடர்ந்து பழையார் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு உள்ள மக்கள் உணவு பொட்டலங்களை வாங்க இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

மழைநீரால் கிராமம் சூழப்பட்டிருப்பதால் கடும் அவதியில் சிக்கியிருக்கும் மக்கள், உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கி வருகின்றனர். அதேநேரத்தில் தங்கள் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | கோவைக்கு அடுத்தது சென்னை?… அல்கொய்தாவுடன் தொடர்பு… ஒருவர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link