மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில், கல்லூரி வாசலிலேயே கதாநாயகனின் தந்தையை மாணவர்கள் தாக்கும் காட்சி ஒன்று வரும். அந்தக் காட்சியை திரையில் பார்த்தாலே அனைவருக்கும் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதே சம்பவம் போன்று நிஜத்தில் மாணவியின் தந்தைக்கு மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் கடந்த 3ஆம் தேதி மாலை மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி வந்துகொண்டிருந்தது. 

அந்த ஊர்திக்கு முன்பாக சில இளைஞர்கள் முழு போதையில் இருசக்கர வாகனத்தில் மூர்க்கத்தனமாக ஹார்ன் அடித்துக்கொண்டும், கத்திக்கொண்டும் அதிவேகமாக வந்துள்ளனர். இதனால் அந்த சாலையில் சென்ற அனைவரும் பீதியடைந்தனர். சரியாக அந்தநேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளும் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். 

அப்போது கல்லூரியில் படிக்கும் தன் மகளை அழைத்து செல்ல வந்த ஒரு தந்தை, டூவீலரில் கத்திக்கொண்டு வந்த குடிகாரன்களை பார்த்து கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த போதைக் கும்பல், உடனே தங்களது வண்டிகளை நிறுத்திவிட்டு இறங்கி வந்து மகளின் கண் முன்பாகவே அந்த தந்தையை தாங்கள் வைத்திருந்த ஹெல்மெட் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக அமைச்சரின் ஆதரவாளர்

இதில் அவர் பலத்த காயமடைந்தார். கல்லூரி வாசலில், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததைக் கண்டு கல்லூரி மாணவிகள் அலறியடித்து ஓடினர். அதேசமயம் அங்கு இருந்த மற்ற ஆண்கள் தாக்க வந்தவர்களை தடுக்காமலும், தாக்குதலுக்கு உள்ளானவருக்கு துணை நிற்காமலும் வழக்கம்போல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே செல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்த அராஜக செயலில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர். இந்நிலையில், மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மதுபோதையில் தகராறு செய்த ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம், நாகப்பிரியன், சதீஷ்குமார், அஜித்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி முன்நின்ற மாணவியின் தந்தையை தாக்கிய நிலையில் 6 பிரிவுகளின் கீழ் செல்லூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Source link