பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு வழங்கும் சட்டம்  செல்லும் என நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பு சமூக நீதி கோட்பாட்டிற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானதாகும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு உச்சபட்ச அநீதியாகும்.இந்த தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் முறையீடு செய்யப்படும்.

உயர் சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே 10% உள்ஒதுக்கீடு என்ற சட்டம் செல்லாது என இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருந்தும் ஐந்து நீதிபதிகளுக்கும் ஒரு நிலைப்பாடே உள்ளது.விசிக சார்பில் இந்த வழக்கில் வாதாடினோம்.இந்தச் சட்டத்தில் எந்த கால வரையறையும் இல்லை.இந்தச் சட்டத்தில் சமூக நீதி கோட்பாடு பின்பற்றப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவம் என்கிற முக்கியமான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிறது.தீர்ப்பு சமூக நீதியின் மேல் விழுந்த பேரிடியாகும். இதுதான் ஆர்எஸ்எஸ் சங்பரிவாரின் நோக்கமாக இருக்கிறது.சங்பரிவாரின் ஓபிசி விரோத சதிச் செயலில் உருவானதுதான் பொருளாதார  அளவுகோலில் உள்ள இட ஒதுக்கீட்டுச் சட்டம்.

தீர்ப்பை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசி சமூகத்தினருக்கு உள்ளது. சங் பரிவார் சதி திட்டத்தை ஓபிசி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என விசிக சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

மேலும் படிக்க | Tamil Nadu Board Exam 2023: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சனாதனவாதிகள் எல்லா துறைகளிலும் நிறைந்துள்ளார்கள் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு சான்று.ஆயிரம் சதுர அடியில் வீடு வைத்திருப்பவர்களையும் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களையும் மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஈட்டுபவர்களை எவ்வாறு ஏழை எளியவர் என்று மத்திய அரசு வரையறை செய்கிறது.பொருளாதார அளவுகோல் என்று சொல்லிவிட்டு சாதியைத்தான் அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள மார்க்சிஸ்ட்களுக்கு நான் வேண்டுகோளை வைக்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link