நடிகைகள் குஷ்பு, நமீதா, காய்திரி ரகுராம் உள்ளிட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் குறித்து, அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கைது செய்யக் கோரியும், திமுகவை கண்டிக்கும் வகையிலும் பாஜக மகளிரணி சார்பில், இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் படிக்க | Go Back Modi Trending : மோர்பி பால விபத்து – பலியெடுத்த அலட்சியம்… உச்சக்கட்ட கோபத்தில் குஜராத்!

கடந்த சில நாள்களுக்கு முன், இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை ஆர்.கே. நகரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பங்கேற்று பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக மகளிரணியில் உள்ள நடிகைகள் குறித்து அவதூறான கருத்தைகளை தெரிவித்தாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

தொடர்ந்து, எழுந்த சர்ச்சையை அடுத்து, தான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்றும், இருப்பினும் தன் பேச்சால் யாரும் புண்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் சைதை சாதிக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்னை புறக்கணியுங்கள் – அண்ணாமலை அடாவடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link