ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளனர் என்பதால், பாதுகாப்பு கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்திற்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, இன்று தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிலையில் விரைவில் தாங்களும் செல்ல இருப்பதாகவும் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளான ஜேசிடி பிரபாகர் சென்னை ராயப்பேட்டை E2 காவல் நிலையத்தில் மனு வழங்கினார். காவல் ஆய்வாளரிடம் மனு வழங்கிய பின் செய்தியாளர்கள் சந்தித்த பேசிய ஜேசிடி பிரபாகர், “தன் மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன்  ஒப்பந்தம் போட்டு  செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அதனால் தான் ஓ பன்னீர்செல்வத்தை ஒதுக்குகிறார் எனக்கூறினார்.

செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ் தற்பொழுது சென்னையில் இல்லாததால் அவர் வந்த பிறகு ஆலோசனை செய்து விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வோம் எனக்கூறினார்.

மேலும் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் அலுவலகம் செல்ல எந்த தடையும் இல்லை. ஒ.பி.எஸ் அதிமுக அலுவலகம் செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கும் வகையில் பேசினார். நாங்கள் அதிமுக அலுவலகம் செல்லும் போது சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த உள்ளனர். எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும் படிக்க: துரோகம்.. திமுகவின் பினாமி.. பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓபிஎஸ் -ஈபிஸ் விமர்சனம்

இன்று ராசி பார்த்து அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பொது செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் என்று சபதம் எடுத்தவர், இன்று எந்த ராசி பார்த்து பொது செயலாளர் பதிவியில் அமர்ந்தார் என்று தெரியவில்லை. ஜானகி அவர்கள் செய்த தியாகத்தால் தான் இன்று அதிமுகவில் இரட்டை இலை உள்ளது.

அதிமுக கட்சியை பலவீனம் படுத்ததும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி பேட்டி கொடுத்து கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார். ஓடுகிற கப்பலில் யார் போடுகிற ஓட்டை பெரிது என பேசி கொண்டு இருக்கிறார்கள். கப்பலை கரை சேர்க்க வேண்டும் என நினைப்பதில்லை எனக்கூறினார்.

மேலும் படிக்க: ’உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓபிஎஸ்’ ஜெயக்குமார் கடும் தாக்கு

மேலும் யாருடனோ சேர்ந்து கொண்டு கட்சியை பலவீன படுத்துவதற்காவே தன் மீதுள்ள எல்லா வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்து கொள்வதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி இவ்வாரெல்லம் செய்து வருகிறார் எனக்கூறிய அவர், எல்லா வழக்குகளில் இருந்தும் தன்னை காப்பாற்றி கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன்  ஒப்பந்தம் போட்டு  செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அதனால் தான் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்குகிறார் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி ஏன் பொறுமையாக இருந்து அனைவரையும் அரவணைத்து செல்ல கூடாது என கட்சியில் பல நிர்வாகிகள் நினைகின்றனர் என கூறினார். அவர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்-க்கு இணையாக தன்னை நினைத்து கொண்டு கனவிலே மிதக்கிறார். அதன் வெளிப்பாடாகவே அவர்களுக்கு இணையாக அலுவலகத்தில் தன் புகைப்படத்தை வைத்துள்ளார் எனக்கூறினார்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் – புகழேந்தி தாக்கு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link