சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சேகர் (46). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மூத்த மகன் பார்த்தசாரதி (18). இவர், தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். இளைய மகன் பாரதி செல்வா (14). இவன் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை சேகர், தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு, பாரதிராஜா, பாரதி செல்வா ஆகிய இருவரும் வீட்டு கதவை பூட்டி விட்டு கல்லூரி, பள்ளிக்கு சென்று விட்டனர்.

பின்னர் மாலை கல்லூரி படிப்பு முடித்து வீட்டிற்கு பாரதிராஜா வந்த போது, அங்கு பாரதிசெல்வா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இருந்தான். இதனை கண்ட அண்ணன் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து கொரட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், பள்ளி ஆசிரியர்கள் அடித்து கொடுமை படுதுவதாகவும் இதானல் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் கை அறுத்துகொண்டு சாக போகிறேன், இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை என பதிவிட்டுள்ளார். தனது சாவுக்கு பெற்றோர் காரணம் அல்ல; முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம். பள்ளி அராஜகம் செய்வதாகவும், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும் படிக்க | காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு

தன்னை சென்னையில் புதைக்க வேண்டாம் எரிக்க வேண்டாம். நகரில் தன்னை எங்கே புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டுமென உருக்கமான பதிவேற்றி உள்ளார். மேலும் மற்றொரு வீடியோவில் தூக்கு மாட்டிக்கொள்வது பதிவாகியுள்ளது. முன்னதாக தந்தை கண்டித்ததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டர் என புகார் அளிக்கப்பட நிலையில் தற்போது, எனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம், என்னை தினமும் அடித்து துன்புறுத்துவார்கள் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்கிறேன் உருக்கமான வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | ஆத்தூர் அருகே கோர விபத்து; 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link