திருப்பத்தூர் மாவட்டம் சின்னபசலிக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னகண்ணு (வயது 55). இவர் அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக்கு காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார். 

மேலும் படிக்க | வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: செந்தில் பாலாஜி

இந்நிலையில் கழிவறையின் அருகாமையில் உயர்மின் அழுத்தம் உள்ள மின்சார கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனை சற்றும் கவனிக்காத சின்னக்கண்ணு, ஏதோ தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து அதை அப்புறப்படுத்த கையை வைக்கும் போது, மின்சாரம் தாக்கி கம்பியைப் பிடித்தவாரே சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். 

சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் மழை பெய்துகொண்டிருந்ததால் ஒரு சில இடங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் காணப்பட்டு வருகின்றன. இதேபோல், சின்னக்கண்ணு வீட்டு வாசலில் சென்ற மின்சாரக் கம்பியும் அறுந்து விழும் நிலையிலேயே இருந்தது. இதனால், அச்சமுற்ற அக்குடும்பத்தினர், மின்சாரக் கம்பியை மாற்றுமாறு பலமுறை வெங்களாபுரம் மின்சார அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். அதன் பலனாக தற்போது அப்பாவி ஒருவர் பலியாகியுள்ளார். மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. அதிகாரிகளின் அலட்சியங்களுக்கு இன்னும் எத்தனை அப்பாவி மக்கள் தங்களின் உயிர்களைக் காவு கொடுக்க வேண்டியிருக்குமோ.! 

மேலும் படிக்க | ஸ்பெஷல் உரம் ஒரு கிலோ ஒரு ரூபாய் மட்டுமே! மாநகராட்சி நிர்வாகம் புரட்சி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link