புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த ஆசிரியர் சித்திரா தேவி ஆவார். இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார், மேலும் இவர் அங்குள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆசிரியர் சித்திரா தேவி வழக்கம் போல பள்ளிக்கு பணிக்குச் சென்ருல்லார். மேலும் அங்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தீடீரென அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் எனும் ஆசாமி குடி போதையில் பள்ளிக்குள் புகுந்தார். பிறகு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார், அத்துடன் ஆசிரியர் சித்திரா தேவியை கொலை மிரட்டல் விடுத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். 

மேலும் படிக்க | பிச்சைக்காரருக்கு 24ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆசிரியர் அரசுப்பணி – எப்படி கிடைத்தது ?

இந்த சம்பவம் நடந்த போது பள்ளியில் பயிலும் 26 மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து உள்ளனர். பின்னர் அங்கு வந்தவர்கள் சித்திரவேலை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். 

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை சித்ரா தேவி வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தநார். அதன் நிலையில் வடகாடு போலீசார் சித்திரைவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர், மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியை பணியிடை நீக்கம் – அப்படி என்ன செய்தார் ?

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link