சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள எம் பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது சொந்தமான இடத்தில் 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. மேலும், செல்போன் டவரை பாதுகாக்க அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் சில போலியான ஆவணங்களை காட்டி செல்போன் டவர் செயல்படாமல் உள்ளது,  எனவே அதை கழற்றி வேறு இடத்திற்கு அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய அந்த காவலாளி, செல்போன் டவரை கழற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுமார் 30 லட்சம் மதிப்பிலான செல்போன் டவரை பகுதி  பகுதியாக பிரித்து லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன பணியாளர்கள் செல்போன் டவரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்பு அங்கே சென்றுள்ளனர். அப்போது செல்போன் டவர் மாயமாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தனியார் செல்போன் நிறுவன பராமரிப்பு மேலாளர் தமிழக அரசு, வாழப்பாடி காவல் நிலையத்தில் செல்போன் டவரை காணவில்லை என புகார் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஐஸ்கிரீம் ஆடர் செய்தவருக்கு ஆணுறை; ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி!

புகாரை பெற்று காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டபோது செல்போன் டவர் படிப்படியாக அகற்றப்பட்டு திருடப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த ராகேஷ், தூத்துக்குடி மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகிய மூன்று பேரும் 10 பேர் கொண்ட கும்பலோடு இணைந்து டவரை திருடி சென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! பகீர் பின்னணி!

இதனையடுத்து மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைதுசெய்து திருடப்பட்ட செல்போன் டவர் மற்றும் உதிரிபாகங்கள் ஜெனரேட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த நூதன திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link