சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டும், நெல் கொள்முதல் நிலையத்தையும் பார்வையிட்டும், பொது மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார். அப்போது கிராம முதியவர்கள் சீமானின் கால்களில் வீழ்ந்து புதிய விமான நிலையம் அமைந்தால் ஆதலால் ஏற்படும் பாதகங்களை எடுத்துக்கூறியப்போது சீமானும் கண் கலங்கி அவர்களை சமாதானம் செய்தார்.

மேலும் படிக்க | ஜி.யு.போப் குறித்த சர்ச்சை பேச்சு : ஆளுநருக்குக் குவியும் கண்டனங்கள்

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசுகையில், 

நாங்கள் வானூர்திகளை எதிர்ப்பவர்கள் அல்ல, ஏற்கனவே சென்னையில் 1500ஏக்கரில் வானூர்தி நிலையம் உள்ளது.அதைக் கட்ட நிலம் கொடுத்தவர்கள் தான் நாங்கள்,

சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 90 லட்சம் பயணிக்கிறார்கள், ஏற்கனவே இருக்கின்ற சென்னை வானூர்தியில்  என்ன பிரச்சனை இருக்கின்றது ??? சென்னை விமான நிலையத்தில்  100 முறைக்கும் மேல் கண்ணாடி உடைந்துள்ளது அதனை சரிசெய்ய முடியவில்லை. தமிழகத்தின் தலை நகரான சென்னையில் முறையான சாலை வசதிகள் இல்லை,இந்த விமான நிலையம் கட்டுவதால் யாருக்கு வளர்ச்சி ???

இரண்டாவது ஏர்போர்ட் இந்த இடத்தில் அமைவதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் காரணம், ஏர்போர்ட் வர காரணம் திமுக எம்பி கனிமொழி தான் காரணம், முழு காரணமும் திமுக தான், ஏன் என்றால் பரந்தூரை சுற்றியுள்ள எல்லா இடங்களையும் திமுகவினரின்  ஜி ஸ்கொயர் நிருவனம் வாங்கி வைத்துள்ளது, இங்கு ஏர்போர்ட் கட்டினால் தற்போதைய சந்தை மதிப்பை விட கூடுதலாக அவ்விடங்கள் விற்கப்படும் என்பது தான் காரணம்.

சொந்த விமானம் கூட இல்லாமல் இருக்கும் இந்த நாட்டிற்கு  ஏன் புதிய ஏர்போர்ட், அனைத்து விமான நிலையங்களையும் அரசு விற்று வருகிறது, அதானி துறைமுகத்தை கட்டுவது போல் ஏர்போர்ட்டைக் கூட கட்டலாம். 4791.29 ஏக்கரில் ஏர்போர்ட் கட்டப்படுகிறது, இதை நேரடியாக அதானி கட்டினால் நாம் சண்டை போடுவோம் அதனால் அரசு கட்டி அவரிடம் கொடுக்கப் போகிறது. இந்த ஏர்போர்ட்டை கட்டி யாரிடம் கொடுப்பீர்கள்,

இந்த மாவட்டத்தில் நெல்லை கொள்முதல் பண்ணி வைக்க ஓர் முறையான குடோன் கிடையாது,ஆனால்  டாஸ்மாக்கில் விற்பதற்கு மதுபானங்களை சேமித்து வைக்க குடோன் உள்ளது, நெல் மூட்டைகளை மூடிட 40 கோடிக்கு தார்பாய்கள் வாங்கப்படும் என சொல்லும் இந்த அரசுக்கு ரூ.4 கோடியில் ஒரு குடோன் கட்டிட முடியவில்லை,

ஏர்போர்ட் எங்கு வேண்டும் என்றாலும் கட்டலாம், எந்தக் கொம்பாதி கொம்பனும் விவசாய நிலங்களை உருவாக்க முடியாது, ஒரு விவசாய நிலம் உருவாக வேண்டுமென்றால் பல தலைமுறையினரின் வேர்வையும்  ரத்தமும் அதில் சிந்தி இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | iPhone 13-ல் ரூ. 34,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் சேலில் அதிரடி சலுகை, முந்துங்கள்!!

தலை நகர் சென்னையில் மழை நீர் கழிவு நீர் வெளியேற இதுவரை ஒரு கால்வாய் வாய்கால் இல்லை ,உங்களுக்கு என்று யாருமில்லை என எண்ண வேண்டாம், உங்களுக்கென நான் இருக்கின்றேன், நான் இங்கு இருக்கும் விமான நிலையம் இங்கு அமையாது என தெரிவித்தார்.

இதனை அடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலைகளை எதிர்த்து போராடினீர்களா இல்லையா ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினர். 8 வழி சாலை என்றால் நாங்கள் எதிர்ப்போம் என சொல்லிவிட்டு , பயணம் தூர குறைப்பு சாலை என பெயர் மாற்றி விட்டார்கள், இது தவறு என  தெரிவித்தார்.

மேலும் படிக்க | கடன் செயலிகளின் ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூகுள் ப்ளே ஸ்டோர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link