கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் சீரான சூழ்நிலை நிலவவில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வுகள் ஆன்லைனில் நடைபெற்றது. 

இதற்கிடையில் பள்ளி பாடங்களின் அளவும் கனிசமாக குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் பள்ளி படிப்பு கடந்த 2 ஆண்டுகளாக முடக்கத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டில் பள்ளிகள் சீரான முறையில் இயங்கிவருவதால் தேர்வுகள் முழு வீச்சில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதேபோல் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துத் தேர்வுகளும் பொது முறையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான காலாண்டுத்தேர்வுகள் பொது காலாண்டு தேர்வாக நடத்தப்பட வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ள பள்ளி கல்வித்துறை, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பள்ளி கல்வித்துறை, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Source link