விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மருத்துவர்கள் 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு ஆளில்லாத நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் இளைஞர் ஒருவர் புகுந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் அங்கு உள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தனது உடைகள் அனைத்தையும் கழட்டி நிர்வாணமாக அங்கேயே சுற்றி வந்துள்ளார். அப்போது தங்கும் விடுதியில் இருந்து ஒரு செவிலியர் வெளியே வருவதைக் கண்ட அந்த இளைஞர் அந்த செவிலியர் மீது பாய்ந்துள்ளார்.

மேலும் படிக்க | காக்கைக்கு கையில் வடை தரும் டீக்கடைக்காரர்! வைரலாகும் வீடியோ!

பதறி நிலை தடுமாறிய செவிலியரை பலவந்தமாக பிடித்து அவரது முகத்தில் கடித்து குதறி உள்ளார் அந்த மர்ம நபர். இதனால் அலறித் துடித்த செவிலியரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம இளைஞர் விடுதிக்குள் சென்று செவிலியரின் உடையை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்துக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது விசாரணையில் அந்த மர்ம இளைஞர் பாளையம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

மேலும் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம்பட்ட அந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து செவிலியரை இளைஞர் ஒருவர் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | குழந்தை இறந்து பிறந்தால் எத்தனை நாட்கள் பிரசவக் கால விடுப்பு எடுக்கலாம்? மத்திய அரசு விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link