விழுப்பும் மாவட்டம் செஞ்சி அடுத்த அனையேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி வேலை செய்து வரும் இவரது மனைவி ராணியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் யின் மனைவி ராணி. 50 வயதாகிய ராணிக்கு கடந்த சில காலமாக வலி ஏதுமின்றி வயிறு வீங்கிய வண்ணம் இருந்துள்ளது. இவரது வயிறு கனத்தும், பெருத்தும் காணப்பட்டது. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட ராணி செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அணுகினார். அப்போது ராணியை பரிசோதித்த மருத்துவர்கள் ராணியின் கர்ப்பப்பையில் கட்டி ஒன்று இருப்பதை கண்டுப்பிடித்தனர். மேலும் அந்த கர்ப்பப்பையில் இருந்த கட்டியானது சுமார் 6 கிலோ கொண்ட ராட்சத கட்டியாக இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கணித்தனர். 

இதையடுத்து உடனடியாக ராணிக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 29 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு, செஞ்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசாந்த் தலைமையில் டாக்டர் ராஜலட்சுமி, மயக்கவியல் மருத்துவர் சரண்ராஜ் உள்ளடங்கிய மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 

மேலும் படிக்க: பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, ராணியின் கர்ப்பப்பையில் இருந்து சுமார் 6 கிலோ கட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில் அவர் மேற்கோண்ட சிகிச்சைக்காகவும் பராமரிப்பிற்காகவும் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நலம் சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நநிலையில், இது குறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராணியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், 10,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கி நலம் பெற வாழ்த்தினார்.

மேலும் படிக்க: அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link